சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் விமானங்கள், பிற்பகல் வரை ரத்து செய்ய வாய்ப்பு - பயணிகள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மோன்தா தீவிர புயல் காரணமாக, ஆந்திராவில் இருந்து சென்னை வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவாகிய மோன்தா புயல் இன்று மாலை அல்லது இரவு ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மோன்தா புயலால் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,  விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி ஆகிய விமான நிலையங்களில் இருந்து, சென்னைக்கு இயக்கப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல், சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் விமானங்களும் பிற்பகல் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Night
Day