செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

தமிழ்நாடு மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, துறை இல்லாத அமைச்சராக 8 மாதங்களாக தொடர்ந்து வந்தார். அவரது துறைகள் நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. 

இந்த நிலையில், தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி திங்கள்கிழமை ராஜினாமா செய்துள்ளார். புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஸ்டாலினுக்‍கு அனுப்பியதாகவும், செந்தில்பாலாஜியின் ராஜினாமா கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day