செங்கல்பட்டு: நவீன முறையில் குடிநீர் வசதி செய்து கொடுத்த தொண்டு நிறுவனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நவீன முறையில் ஏடிஎம் கார்டு மற்றும் கூகுள் பே மூலம் குடிநீர் பெறும் வசதியை தனியார் தொண்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. தச்சூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. இந்நிலையில், மனம் அறக்கட்டளை எனும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அப்பகுதியில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை நிறுவியுள்ளது. இதனை தச்சூர் ஊராட்சி தலைவர் ஸ்டீபன் சவரி துவக்கி வைத்தார். 25 லிட்டர் தண்ணீருக்கு 5 ரூபாய் மட்டுமே பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day