ஒரு சவரன் ரூ74,500-ஐ கடந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் உயர்ந்து சவரன் 74 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து காணப்படுவதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

varient
Night
Day