தமிழகம்
தென்பெண்ணை ஆற்றில் தென்பட்ட நீர் நாய்
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கூடன்குளத்தில் ஆயிரம் மெகாவாட் மின்திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 3, 4 அணு உலைகளுக்கான பணிகள் 70 சதவீதம் நடந்து முடிந்துள்ளன. 5 மற்றும் 6 வது அணு உலைக்கான பணிகள் 22 சதவிகிதம் நடைபெற்று வருகிறது. இதனிடைய முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைய 60 நாட்கள் ஆகும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், 562 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...