குலதெய்வம் கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம் - கோவிலில் அமர்ந்து தியானம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, குலதெய்வம் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தி, சுவாமி தரிசனம் செய்தார். 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் குலதெய்வமான அருள்மிகு வீரனார்  கோவில்,  தஞ்சை அருகே விளார் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அருள்மிகு வன துர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக இதற்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட வன துர்க்கை சிலைக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. மேலும் வன துர்க்கைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை  மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து அருள்மிகு வீரனார் மற்றும் மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவிலில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Night
Day