அயோத்தி ராமர் கோவில் விழா - மிதாலி, சாய்னா உள்ளிட்ட விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரலாற்று சிறப்பு மிக்‍க ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், முக்‍கிய அரசிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், மடாதிபதிகள் என ஆயிரக்‍கணக்‍கானோர் கலந்துகொண்டனர். 

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் நேரலையில் கண்டுகளித்த நிலையில், முக்‍கிய அரசிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், மடாதிபதிகள் என சுமார் 11 ஆயிரம் பேர் விழாவில் நேரில் பங்கேற்றனர். நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், ஜாக்கி ஷெராப், சிரஞ்சீவி, ராம் சரண், விக்கி கவுசல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நடிகைகளில் மாதுரி தீட்சித், கத்ரீனா கைப், கங்கனா ரணாவத், அலியா பட் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தொழிலதிபரான முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானியுடன் கலந்துகொண்டார். அவரது சகோதரர் அனில் அம்பானியும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்தார். இதேபோன்று ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அனன்யா பிர்லா ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்தார். கிரிக்‍கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சுழற்பந்து ஜாம்பவான் அணில் கும்ப்ளே, முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட​விளையாட்டு வீரர்களும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். யோகா குரு ராம்தேவ், அயோத்தி ராமர் கோவில் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் உமாபாரதி ஆகியோரும் வந்திருந்தனர். உமாபாரதியை சாத்வி ரிதம்பரா ஆரத்தழுவி அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

Night
Day