கிருஷ்ணகிரி: சாலையின் குறுக்கே வந்த நாயால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி அருகே சாலையின் குறுக்கே வந்த நாயால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர். ஒசூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார், சூளகிரி அடுத்த அழகுபாவி பகுதியில் வந்தபோது  சாலையில் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட கார் ஓட்டுநர் காரை சட்டென நிறுத்தியதால் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி உள்ளிட்ட 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day