சட்டவிரோதமாக மது விற்பனை - விளம்பர திமுக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறும் வீடியோ வைரலாகி வருகிறது. 

போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணி முதலே கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் விற்பனைக்கு தடையில்லாமல் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும், போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் மதுவிற்பனையை போலீசார் மாமூளை வாங்கிக்கொண்டு கண்டு கொள்ளாமல் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சந்தம்பட்டி அக்குமாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள மாந்தோப்பில் ஜோராக மதுவிற்பனை  நடைபெறும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனை விளம்பர திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day