எழுத்தின் அளவு: அ+ அ- அ
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனி முத்திரை பதித்த ரோபோ சங்கர் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
புரட்சித்தாய் சின்னம்மா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள இரங்கல் செய்தியில், சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனி முத்திரை பதித்த ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார் செய்தியறிந்து வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். தனது சிறப்பான நடிப்பாற்றலால் அனைவரையும் மகிழ்வித்த ரோபோ சங்கரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலக ரசிகர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.