நடிகர்கள் தனுஷ், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

மருத்துவமனையில் இருந்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரோபோ சங்கரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரோபோ சங்கர் உடலுக்கு நடிகர்கள் தனுஷ், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்க நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி செலுத்தினார். வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு நடிகர்கள் ராதாரவி, வையாபுரி, இளவரசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

ரோபோ சங்கர் உடலுக்கு நடிகர் எம்.எஸ். பாஸ்கர் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு சண்டை பயற்சியாளர் ராமு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பண மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் காளி வெங்கட், ஆர்த்தி மற்றும் கணேஷ், நாஞ்சில் விஜயன் ஆகியோர் ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ரோபோ சங்கர் உடலுக்கு திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகை நளினி, பாடலாசிரியர் ஸ்நேகன், பாடகர் மனோ, சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் பரத், நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி உள்ளிட்டோர் ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Night
Day