தருமபுரி: காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சித்திரப்பட்டி, செல்லமுடி, முழியான்காடு, நரசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் மேச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Night
Day