தமிழகம்
அரசு விழாவில் பெண்களுக்கு உணவு வழங்காமல் அலைக்கழிப்பு
ராமநாதபுரத்தில் உதயநிதி காணொலி வாயிலாக பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் உணவு ...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சின்ன ரெட்டியபட்டியில் முறையாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொருந்தலூர் ஊராட்சி பாறைப்பட்டி, உப்பிதாதன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் காவிரி குடிநீர் வழங்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த சில மாதங்களாக தங்களுக்கு குடீநீர் முறையாக வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். தகவலறிந்து வந்த தோகைமலை போலீசார் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் உதயநிதி காணொலி வாயிலாக பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் உணவு ...
மதுரையில் பட்டியலின இளைஞரை திமுக நிர்வாகி சாதி ரீதியாக இழிவாக பேசும் வீட?...