பீகார் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றிபெற்றது. 

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ் குமார், தீடிரென கூட்டணியில் இருந்து விலகி தனது முதலமைச்சர் பதவியையும் ராஜனாமா செய்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராக  பதவியேற்றுக் கொண்டார்.  இதை தொடர்ந்து நிதிஷ்குமார் அரசு மீது பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 129 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால் நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிரான வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

Night
Day