எங்கும் பார்த்தாலும் லஞ்சம், ஊழல்... முதியவர் ஆவேசம்! 07-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில் மனைவியின் உரிமை தொகையை வாங்க அலைக்கழிக்கப்படும் முதியவர், வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவேச குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல் என கூறி வேதனையை வெளிப்படுத்திய முதியவரின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

விளம்பர அரசின் விளம்பர பட்டியலில் ஒன்றான மகளிர் உரிமை தொகையான ஆயிரம் ரூபாய் இன்னும் பலருக்கு கிடைக்காத நிலையே நீடித்து வருகிறது.  

ராமநாதபுரம் மாவட்டம் காரேந்தல் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் தனது மனைவிக்கு கிடைக்க வேண்டிய மகளிர் தொகை வரவில்லை எனக்கோரி ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, வருவாய்துறை அலுவலர்களோ மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை பார்த்த முதியவர் ஆத்திரமடைந்து காட்டமான பேச்சினை வெளிப்படுத்தினார். 

என்றைக்கு மகளிர் தொகை அறிவித்தார்களோ அன்றிலிருந்து இன்று வரை அலுவலகங்களுக்கு அலைந்து வருகிறேன் என்றும், விஏஓ அலுவலகத்தில் கேட்டால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு போக சொல்கின்றனர்... வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு போக செல்கின்றனர்.. கோட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டால் ஆட்சியர் அலுவலகத்திற்கு போக செல்கின்றனர்.. அங்கு சென்று கேட்டால் ஸ்டாலினுக்கு அனுப்பி இருக்கிறோம்.. வந்ததும் சொல்கிறோம் என அலைக்கழிப்பதாக வேதனையை வெளிப்படுத்தினார் முதியவர் காளிதாஸ். 

வசதி படைத்தவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கொடுத்திருக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்ட முதியவர், தங்களை போன்ற ஏழை, எளியவர்களை கண்டு கொள்வதே இல்லை என்றும் எங்கு பார்த்தாலும் லஞ்சம், எங்கு பார்த்தாலும் ஊழல் என்றும் தனது ஆவேசத்தை கொட்டித் தீர்த்தார். 

அடிப்பட்ட காலுடன் மகளிர் உரிமை தொகையான ஆயிரம் ரூபாய்க்கு அலைகிறேன் என்றும் உரத்த குரலில் கோபத்துடன் தன்நிலையை விளக்கினார் முதியவர் காளிதாஸ். 

மகளிர் உரிமை தொகை அறிவிக்கப்பட்ட நாள் முதலாக ஏழை, எளிய மக்கள் ஏராளமானோர் இதேபோன்று அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு விளம்பர திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 

Night
Day