ஊழல் புகாருக்கான அதிகாரிக்கு முதல்வர் விருது

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் பலகோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட மேலாண்மை இயக்குனர் சிவமலருக்கு, விளம்பர திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருபவர்  சிவமலர். இவர் மீது ஏற்கனவே பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் அதே வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் வரலட்சுமி, ஆதாரங்களுடன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதன்படி,  இதுவரை 47 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அவர் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தணிக்கை துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என வரலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவமலருக்கு, விளம்பர முதலமைச்சர் விருது வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day