ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மீனவர்களை விடுவிக்ககோரி ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்களின் குடும்பத்தினர் கால வரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் , இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு முன்னெடுப்பையும் செய்யவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மீனவர்களை விடுவிக்ககோரி மீனவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீனவர்களின் ரயில் மறியல் காரணமாக தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரயில் மறியல் போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர். 

Night
Day