அன்புமணிக்கு வரும் 31ஆம் தேதி வரை கெடு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒட்டுகேட்பு கருவி வைத்தது கட்சியை பிளவுப்படுத்த முயன்றது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு, அன்புமணி பதில் அளிக்க வரும் 31ஆம் தேதி வரை பாமக  நிறுவனர் ராமதாஸ் கெடு விதித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவுடன் கூட்டம்  நடைபெற்றது.  இந்த குழு கடந்த 17 ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அறிக்கை ஒன்றை அளித்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த 16 குற்றச்சாட்டுகள் குறித்து  விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நேற்று ராமதாஸ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்நிலையில் தைலாபுரத்தில் நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கை கூட்டத்தில் அன்புமணி மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ஒழங்கு நடவடிக்கை குழு அளித்துள்ள 16 குற்றச்சாட்டுக்கள் குறித்து அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,  இதற்கு வரும் 31ஆம் தேதிக்குள் நேரிலோ, கடிதம் வாயிலாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் ராமதாஸ் தெரிவித்தார்.

Night
Day