ஈரோடு: தேர்தல் பறக்கும் படை சோதனையால் ஜவுளி வியாபாரத்தில் பின்னடைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை காரணமாக வெளிமாநில ஜவுளி வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளதால் வியாபாரம் பின்னடைவை சந்தித்துள்ளதாக ஈரோடு ஜவுளி வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் வெளிமாநில ஜவுளி வியாபாரிகள் பணம் கொண்டு வர அச்சப்பட்டு, வருகையை தவிர்த்துள்ளனர். இதனால் ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகளின் வியாபாரம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே, வியாபாரம் பாதிக்காத வண்ணம் சில விதிமுறைகளை தளர்த்தி தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day