இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்

எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து உடல்நலக் குறைவால்  காலமானார். அவருக்கு வயது 74. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் நெல்லை முத்து பணியாற்றியுள்ளார். மேலும் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது. இந்நிலையில், உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல்லை முத்து காலமானார். இதையடுத்து அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. நாளை நெல்லை முத்து உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மூத்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Night
Day