இரவோடு இரவாக நிலத்தை அபகரிக்க முயற்சி... 17 பவுன்சர்கள் கைது... 08-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருகே நள்ளிரவில் அடுத்தவர் நிலத்தை ஆட்டையை போட முயன்ற பவுன்சர் பாய்ஸ் கும்பலை போலீசார் கைது செய்தனர்... சர்வே எண்ணை மாற்றி பத்திரப்பதிவு செய்து போக்கிரியாக வலம் வரும் ரியல் எஸ்டேட் தரகர் தமிழ்ச்செல்வனின் வில்லங்க நடவடிக்கைகளை பற்றிய தொகுப்பை தற்போது காண்போம்...

திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் ஒட்டங்கொள்ளி பகுதியை சேர்ந்தவர் பலராமன்... 

கடந்த 2014ஆம் ஆண்டு தமக்கு சொந்தமாக உள்ள எட்டு ஏக்கர் நிலத்தினை வேங்கிக்கால் கிராமத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர் தமிழ்செல்வன் என்பவர் மூலம் துர்கைநம்மியந்தல் பகுதியை சோந்த செல்வி என்பவருக்கு விற்றுள்ளார் பலராமன்...

இந்நிலையில் பலராமனுக்கு சொந்தமான 38 செண்ட் நிலத்துக்கு ரியல் எஸ்டேட் தரகர் தமிழ்ச்செல்வன் போலி ஆவணம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது...

ரியல் எஸ்டேட் தரகர் தமிழ்ச்செல்வனின் மோசடி வேலையை அறிந்த விவசாயி பலராமன், அவர் மீது திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அது நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது...

அதே சமயம் தமக்கு சொந்தமான நிலங்களை மகள்களுக்கு பலராமன் பாகப்பிரிவினை செய்து கொடுத்ததாகவும் தெரிகிறது...

இந்நிலையில் செவ்வாயன்று நள்ளிரவு நான்கு ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட பவுன்சர் பாய்ஸ், பலராமனுக்கு சொந்தமான 38 சென்ட் நிலத்துக்குள் அராஜகமாக புகுந்தனர்...

நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிற்களை ஜேசிபி மூலம் அழித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நிலத்தின் உரிமையாளர் பலராமன், அவரது மனைவி, மகள் ராஜேஸ்வரி உள்ளிட்ட குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு கும்பலை தடுக்க முற்பட்டுள்ளனர்...

அப்போது பலராமன் உள்ளிட்ட அனைவர் மீதும் பவுன்சர் பாய்ஸ் கும்பல் கத்தி, கம்புகளால் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்...

இது குறித்து கலசப்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டு தப்பி ஓடிய 17 பவுன்சர் பாய்சை அதிரடியாக கைது செய்து, முக்கிய குற்றவாளியான தமிழ்செல்வன், அவரது மகன் பரத் உள்ளிட்ட மேலும் 13க்கும் மேற்பட்டோரை தேடிவருகின்றனர்...

ரியல் எஸ்டேட் தரகர் தமிழ்ச்செல்வனின் அராஜக செயலுக்கு பயந்து படுகாயம் அடைந்த பலராமன் மற்றும் அவரது குடும்பத்தினர், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை எடுத்து கொள்ளாமல் போளுர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்...

Night
Day