ஆளுநர் மாளிகை - ஆர்.என்.ரவி குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். 


தை பொங்கலை முன்னிட்டு, "பொங்கல் பெருவிழா" ராஜ்பவனில் நடைபெற்றது, இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லக்ஷ்மி ரவி, ஆகியோர் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மேற்கு வங்க ஆளுநர் MK நாராயணன், நல்லி சில்க்ஸ்-ன் நிறுவனர் நல்லி குப்புசாமி செட்டி, ஆளுநரின் மகள், இறைவி தொண்டு நிறுவனத்தின் திருநங்கைகள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக ஆளுநருக்கு தமிழர்களின் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கபட்டது. 

varient
Night
Day