எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆசிரியர் பணியில் தொடருவதற்கும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக ஆசிரியர் கூட்டமைப்பினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு கடந்த 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயமற்ற சுமையாக அமைந்துள்ளதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன்மூலம், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே விளம்பர திமுக அரசு இதற்கு தகுந்த தீர்வை காண வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.