ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேளச்சேரி ஏரி, 265 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. இந்நிலையில் காலப்போக்கில் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது 55 ஏக்கர் பரப்பளவில் சுருங்கி உள்ளது. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை மேம்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு அதற்கான கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் சில தினங்களாக மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், வேளச்சேரி 100 அடி சாலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day