அமைச்சர் மூர்த்தியின் புது ஸ்கெட்ச்... வசூல் வேட்டையில் வணிகவரித்துறை...

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 900 ரூபாய் மதிப்பிலான காலி கேன்களுக்கு ரசீது இல்லாததால் வணிகவரித்துறை அதிகாரி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த சக வியாபாரிகள் அதிகாரிகளை சுத்து போட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். என்ன நடந்து என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்...

900 ரூபாய் மதிப்பிலான காலி கேன்களுக்கு ரசீது இல்லை எனக்கூறி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால் தலையில் அடித்து கொண்டு வியாபாரி புலம்பிய காட்சிகள் தான் இவை...

பாவூர்சத்திரத்தில் பொட்டலூரை சேர்ந்த வைத்திலிங்க ராஜ் என்பவர் பிளாஸ்டிக் மற்றூம் பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவர், தனது வீட்டில் இருந்து கடைக்கு விற்பனை செய்வதற்காக காலி தண்ணீர் கேன்களை சாக்கு பையில் கட்டி காரில் எடுத்து சென்றார். அப்போது, அவரை தடுத்து நிறுத்திய வணிகவரித்துறை அதிகாரிகள் காரில் எடுத்து செல்லப்படும் காலி தண்ணீர் கேன்களுக்கு ரசீது கேட்டுள்ளனர். அதற்கு, ரசீது இல்லை என்று அவர் தெரிவித்ததால், 900 ரூபாய் மதிப்புடைய கேன்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் விதித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த வியாபாரி வைத்திலிங்க ராஜ் தலையில் அடித்துக் கொண்டு புலம்பி சாபம் விட்டார். 

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த சக வியாபாரிகள் வணிகவரித்துறை அதிகாரிகள் ஜெயந்தி, ஜெயராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

படிப்பறிவு இல்லாத சிறு, குறு வியாபாரிகளை குறி வைத்து பிடித்து, அவர்களை மிரட்டி 10 ஆயிரம், 20 ஆயிரம் என அபராதம் விதிப்பதாகவும், விடியல் ஆட்சி என்று சொல்லி சிறு வியாபாரிகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்து வயிற்றில் அடிப்பதாகவும் சக வியாபாரிகள் வேதனையை வெளிப்படுத்தினர்.

வியாபாரிகள் ஏராளமானோர் குவிந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறு தொழில் செய்து வரும் வியாபாரிகளை அபராதம் என்ற பேரில் துன்புறுத்த வேண்டாமென வணிகவரித்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். இதனையடுத்து, வியாபாரிகளும், வணிகர் சங்கத்தினரும் சுமூகமாக கிளம்பி சென்றனர். 

மேலும், அபராதம் விதித்து போடப்பட்ட ரசீதுக்கு பணம் கட்டவேண்டாம் என்று கூறி, வியாபாரி வைத்திலிங்க ராஜையும் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதனால், உண்மையில் அபராத தொகை அரசுக்கு செல்கிறதா இல்லை அமைச்சருக்கு செல்கிறதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

இதனிடையே, கடந்த ஒருவாரமாக பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள சிறு, குறு வியாபாரிகளை நோட்டமிட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர். விளம்பர அரசுக்கு பல்வேறு விதமாக நூதன முறையில் கல்லாக்கட்டுவதற்காக அமைச்சர் மூர்த்தி வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூலிக்க வேண்டுமென டார்கெட் வைத்துள்ளதாவும், அதிகாரிகள் இதுபோன்று சிறு குறு வியாரிகளை குறிவைத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Night
Day