திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் புரட்சித்தாய் சின்னம்மா தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார். 

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சுவாமி தரிசனத்திற்காக நேற்று திருப்பதி திருமலைக்‍குச் சென்றார். நேற்று இரவு, வராக சுவாமி கோயிலுக்‍குச் சென்று, வராக சுவாமியை வழிபட்டார். 

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை, ஸ்ரீ வெங்கடாஜலபதி சந்நிதிக்‍குச் சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, அர்ச்சனை சேவையில் கலந்துகொண்டு, ஏழுமலையானை தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் பெற்றுக் கொண்டார். 

அதன் பின்னர், ஏழுமலையான் கோயில் எதிரே அமைந்துள்ள ஆஞ்சநேயர் சுவாமி சந்நிதியில், தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி சமர்ப்பித்தும், ஆஞ்சநேய சுவாமியை, புரட்சித்தாய் சின்னம்மா வழிபட்டார். 

தரிசனத்திற்குப் பின்னர், செய்தியாளர்கள் கேள்விக்‍குப் பதிலளித்த புரட்சித்தாய் சின்னம்மா, சுவாமி தரிசனம் மேற்கொண்டது குறித்து தெரிவித்தார்.

Night
Day