அன்புமணி - ராமதாஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல்நிலையத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் பூசலின்,  உச்சமாக, அன்புமணியை பாமகவின் செயல் தலைவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார். மேலும் பாமகவினர் அன்புமணியுடன் எந்தவித தொடர்பும் வைக்கக்கூடாது என்றும், அதையும் மீறி தொடர்பு வைத்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். 

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் வரும் 17ம் தேதி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் உயிரிழந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்த அன்புமணி வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்கள் அந்த அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். அப்போது அங்கு வந்த அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து இருதரப்பினரும் திண்டிவனம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்கம் தங்களுக்கே சொந்தம் என ராமதாஸ் ஆதரவாளர்கள் அன்புமணி ஆதரவாளர்களுடன் வாக்குவாதம் செய்தனர். காவல்நிலையத்திலும் இருதரப்பு ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day