போத்தீஸ் நிறுவனங்களில் 2வது நாளாக IT சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் உள்ள போத்தீஸ் நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமானத்தை மறைத்து தவறான கணக்குகள் காண்பித்ததாக வரி ஏய்ப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் போத்தீஸ் ஜவுளி கடை மற்றும் போத்தீஸ் உரிமையாளர் ரமேஷ் மூப்பனார் மற்றும் அவரது இரு மகன்கள் வீட்டில் வருமான வரி துறையினர் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, நெல்லை, மதுரை, திருச்சி, கோவை என சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு இடங்களிலும் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பென் டிரைவ்கள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day