சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வாங்கப்பட்ட மனுக்களை வீசி சென்ற விவகாரத்தில் நில அளவை துறை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
விளம்பர திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் பட்டா மாறுதல் குறித்து மனுக்கள் வழங்கியுள்ளனர். தீர்வு கிடைக்கும் என நம்பிய நிலையில் பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள் அனைத்தும் வைகை ஆற்றில் கடந்த 29ம் தேதி வீசிப்பட்டிருந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் விளம்பர திமுக அரசு மீது அதிருப்திளையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தி ஊடகங்களின் வெளியான நிலையில் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் மனுக்களை ஆற்றில் எடுத்து விசாரணை செய்து வந்தனர்.
அப்போது, நில அளவை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட மனுக்கள் தான் வைகை ஆற்றில் கிடந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அந்த பிரிவில் பணியாற்றிய 8 ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் நில அளவை பிரிவின் வரை படவாளர் மதுரை வண்டியூரைச் சேர்ந்த முத்துகுமரன்தான் இந்த சம்பவத்தை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து முத்துகுமரனை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.