மணிப்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

மிசோரமில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

5 மாநிலங்களுக்கான 3 நாள் பயணத்தின் முதல் கட்டமாக மிசோரம் மாநிலத்தின் லெங்புய் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்தவாறே, மிசோரம் தலைநகரை இந்திய ரயில்வே உடன் இணைக்கும் 8 ஆயிரத்து 70 கோடி ரூபாய் மதிப்பிலான பைராபி- சாய்ராங் புதிய ரயில் பாதை உட்பட 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை காணொலி வாயிலாக பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர், காணொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, மோசமான வானிலை காரணமாக, ஐஸ்வாலில் உங்களை காண முடியாததற்கு மிகவும் வருந்துவதாக தெரிவித்தார். இந்த ஊடகம் வழியாக உங்களின் அன்பையும், பாசத்தையும் தன்னால் உணர முடிவதாகவும் பிரதமர் கூறினார். செயல்பாட்டின் இயக்கமாக இருந்தாலும், தேசக் கட்டுமானமாக இருந்தாலும், தங்களின் பங்கை வழங்க மிசோரம் மக்கள் எப்போதும் முன்வந்துள்ளதாக கூறிய மோடி, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மிசோரம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

தற்போது மிசோரத்தின் சாய்ரங்கும்- டெல்லியும் ரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, இது வெறும் ரயில் பாதை இணைப்பு மட்டுமல்ல, மாற்றத்துக்கான உயிர்நாடி என்றார். பல ஆண்டுகளாக நமது நாட்டில் உள்ள சில அரசியல் காட்சிகள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, ஆனால், தாங்கள் அவ்வாறு இல்லாமல் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருவதாக கூறினார். 

காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​மருந்துகள், மருத்துவ காப்பீட்டுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதால் நடுத்தர குடும்பங்களுக்கு எட்டாததாக இருந்ததாகவும், ஆனால் இன்று, அவை அனைத்தும் மலிவு விலையில் மாறிவிட்டதாக கூறினார். 

சோப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தற்போது 5 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி பொருந்தும் எனவும், புதிய ஜிஎஸ்டி மூலம் புற்றுநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளும் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.


Night
Day