தமிழகம்
சென்னை திரும்பிய 27 காரைக்கால் மீனவர்கள்
சென்னை திரும்பிய காரைக்கால் மீனவர்கள்இலங்கை கடற்படையினால் கைது செய்யப்?...
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறை மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு ஆஜராகாததால், வழக்கு விசாரணை மார்ச் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ஆறரை கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை திரும்பிய காரைக்கால் மீனவர்கள்இலங்கை கடற்படையினால் கைது செய்யப்?...
பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்க உள்ள நிலையில், அவ?...