"என்னப்பா யாருமே இல்லை" களையிழந்த கலைவிழா...

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் "மதுரை சங்கமம் நம்ம ஊரு திருவிழா" என்ற பெயரில் நடத்தப்பட்ட கலை விழா, காலி நாற்காலிகளால் களையிழந்த விழாவாக மாறியது... உரிய ஏற்பாடுகளை செய்யாமல், காசை கரியாக்கிய விளம்பர அரசு, கலைஞர்களுக்கு இழைத்த மாபெரும் அவமதிப்பு பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

தமிழ்நாடு அரசின் மதுரை மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் "மதுரை சங்கமம் நம்ம ஊரு திருவிழா" என்ற தலைப்பில் 2 நாட்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது...

இதற்காக மதுரை தமுக்கம் மைதானத்தில் பல லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கலை விழா நடைபெற்றது... ஆனால் கலைப்பண்பாட்டு துறையில் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய 2000 உறுப்பினர்களுக்கு கூட முறையான தகவல் அளிக்காமல் விழாவை நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது...

இதற்காக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ள உரிய ஏற்பாடுகளை செய்த அதிகாரிகள், தமிழர்களின் கலையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் சுணக்கம் காட்டியுள்ளனர்...

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க பள்ளி மற்றும் மாணவர்களுக்கு பாஸ் வழங்குவது வழக்கம்.... ஆனால் இத்தகைய ஏற்பாடுகளை செய்யாமல் அதிகாரிகள் கோட்டை விட்டதால் ஆயிரம் பேருக்கு நாற்காலிகள் போடப்பட்ட நிலையில் அறுபது பேர் கூட இல்லாமல் மைதானம் காற்று வாங்கியது...

இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைக்க முதல் ஆளாக மைதானத்துக்கு வந்த ஆட்சியர் சங்கீதா, காலியாக கிடந்த நாற்காலிகளை கண்டு ஆடிப்போனார்...

என்ன பண்ணி வச்சிருக்கீங்க...பார்வையாளர்கள் எங்கே என கலை பண்பாட்டுத்துறை அதிகாரிகளை வறுத்தெடுத்த ஆட்சியர் சங்கீதா, அமைச்சர்கள் வரும் நேரமாகிவிட்டதே.... எப்படி சமாளிப்பது என தெரியாமல் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்தார்...

அப்போது விழாவை துவக்கி வைக்க வந்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மைதானத்தின் பக்கம் பார்வையை திருப்பியதும் காலி நாற்காலிகளை கண்டு காண்டாகி மீண்டும் காரில் ஏறி அமர்ந்து கொண்டார்...

அடுத்த சில நிமிடங்களில் நிகழ்ச்சியை துவங்கி வைக்க வந்த அமைச்சர் மூர்த்தியும், நாற்காலிகள் காற்று வாங்கி கொண்டிருப்பதை பார்த்ததும், முனக ஆரம்பித்தார்...

இதனால் வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக்கொண்டு முரசு கொட்டி நிகழ்ச்சியை துவங்கி வைத்த அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர், ஆள் இல்லாத கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர்கள் என மக்கள் கிண்டலடிப்பார்கள் என பயந்து ஆளை விடுங்க சாமி என மைதானத்தில் இருந்து எஸ்கேப் ஆனார்கள்...

மிகுந்த வேதனையுடன் காலியான நாற்காலிகளை பார்த்து நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம் கருப்புசாமி ஆட்டம், தேவராட்டம், காளியாட்டம், தீச்சட்டி ஆட்டம் உள்ளிட்ட நடனங்களை கலைஞர்கள் நிகழ்த்தி காட்டினர்...

விளம்பர அரசால் கலைஞர்கள் அவமதிக்கப்பட்டதை கண்டித்த தூங்கா நகர மக்கள், ஏன் இந்த குளறுபடி என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்...

Night
Day