”ஓர் தந்தையின் கனவு” லூர்து ஃபிரான்சிஸின் மகன் சிவில் நீதிபதியானார்!

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அருகே மணல் கொள்ளையர்களால் வெட்டி கொல்லப்பட்ட வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ்சின் மகனான மார்ஷல் ஏசுவடியான் சிவில் நிதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்... தந்தையின் கனவை நிறைவேற்றிய தனயன் பற்றிய நெகிழ்ச்சி தொகுப்பு பற்றி சற்று விரிவாக காண்போம்...

தூத்துக்குடி அருகே உள்ள சூசை பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்... முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்...

முறப்பநாடு காவல் நிலைய போலீசாரின் எட்டப்பன் வேலை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் மணல் கொள்ளையர்களால் கிராம நிர்வாக அலுவலகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார் லூர்து பிரான்சிஸ்...

வி.ஏ.ஓ. லூர்து ஃபிரான்சிஸ் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தினர்...

பணியில் நேர்மையாக இருந்த வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொல்லப்பட்ட நிலையில் மனம் தளராத அவரது இரண்டாவது மகனான மார்சல் ஏசுவடியான் என்பவர் தமிழக அரசின் சிவில் நீதிபதி தேர்வுக்கு தயாராகி வந்தார்...

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதி தேர்வில் கலந்து கொண்ட மார்ஷல் ஏசுவடியான், தற்போது தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

தேர்வில் வெற்றி பெற்றது பற்றி மார்ஷல் ஏசுவடியான் கூறுகையில், நேர்மையாக செயல்பட்டதால், மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தனது தந்தையின் கனவை நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நிறைவேற்றி உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்...

தந்தை லூர்து ஃபிரான்சிஸ் போலவே தானும் நேர்மையாக செயல்படுவேன் என மார்ஷல் ஏசுவடியான் உறுதி பட தெரிவித்துள்ளார்...

முறப்பநாடு அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று உரிமையியல் நீதிபதியாக தேர்வாகி உள்ளார்...

இது குறித்து சுரேஷ் குமார் கூறுகையில், நாட்டுக்காக பலரும் காவல்துறை மற்றும் ராணுவத்தில் சேர்ந்து சேவை புரிந்து வரும் நிலையில், தான் நீதிபதியாக வேண்டும் என்ற கனவுடன் செயல்பட்டு, நீதிபதி தேர்வில் வெற்றி கண்டதாக தெரிவித்தார்...

மொத்தத்தில் இரு சிவில் நீதிபதிகள் தங்கள் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்ட மக்கள், மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்...

Night
Day