35 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கான கல்லறை கட்டிய ராஜேஷ்... நெகிழ்ச்சி பின்னணி

எழுத்தின் அளவு: அ+ அ-

தனக்கான கல்லறையை 35 வருடங்களுக்கு முன்பே கட்டி, அதில் இடம்பெற வேண்டிய வாசகத்தையும் தேர்வு செய்து வைத்துள்ளார் மறைந்த நடிகர் ராஜேஷ். உயிரோடு இருக்கும்போதே கல்லறை கட்டியது ஏன்? - அதன் பின்னனி என்ன? என்பது குறித்து ராஜேஷே மனம் திறந்துள்ளார். இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

வாழ்ந்தால் இப்படி தான் வாழ வேண்டும் என்று பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். அதேபோல் தான் நினைத்தது போல, சரியான திட்டமிடலுடன், ஒழுக்கமான ஒரு வாழ்க்கை முறையில் பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் மறைந்த நடிகர் ராஜேஷ். உடல்நலத்தில் அதிக கவனம் கொண்ட ராஜேஷ், சித்த மருத்துவம், அலோபதி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளையும் நன்கு ஆராய்ந்து அதனை பற்றி ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தார்.

தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் நடிகர் ராஜேஷோ தான் இறந்த தனது உடல் எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பது வரை திட்டமிட்டு வாழ்ந்துள்ளார். 

மறைந்த நடிகர் ராஜேஷ் குறித்து அவரது சகோதரர் சத்யன் கூறுகையில், வாழ்க்கை முழுவதும் திட்டமிடலுடன் வாழ்ந்தவர் என்று கூறிய அவர், நிகழ்காலத்திற்கு மட்டுமல்லாமல் எதிர்காலத்திற்கும் சேர்த்து யோசிக்க கூடியவர் தனது சகோதரர் என்றார். கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனக்கான கல்லறை கட்டி, தனக்கு பிடித்த வாசகத்தை எழுத வேண்டும் என்று ராஜேஷ் கூறியதை நினைகூர்ந்தார் சகோதரர் சத்யன்.. 

தனது உடலை அவ்வளவு நேசித்ததாலோ என்னவோ, தான் இறந்த பிறகு இப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைத்து தனக்கான கல்லறையை அவருடைய 40வது வயதிலேயே கட்டியுள்ளார் ராஜேஷ். அவர் லண்டன் சென்ற போது அங்கு, கார்ல் மார்க்ஸ் கல்லறையை பார்த்த பிறகு, அதனை போட்டோ எடுத்து அப்படியே தனக்கு கல்லறை கட்ட வேண்டும் என்று நினைத்ததாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ராஜேஷ் கூறியிருந்தார். 

அதுமட்டுமில்லாமல் தனது கல்லறையில் என்ன வாசகம் எழுத வேண்டும் என்பதையும் முன்பே தேர்வு செய்து வைத்திருக்கிறார் ராஜேஷ். முதலில் மார்பிளில் கல்லறையை 25 ஆண்டுகளில் இடிந்து விழுந்துள்ளதால், பின்னர் கிரானைட் கல் வைத்து தன்னுடைய கல்லறையை கட்டியிருக்கிறார். 

தனக்காக எவன் ஒருவன் கல்லறை கட்டுகிறானோ அவன் 100 ஆண்டுகள் வாழ்வான் என்பது சீனப் பழமொழி... ஆனால் அதற்காக கல்லறை கட்டவில்லை என்றும் கூறியிருக்கிறார் ராஜேஷ்...

தினமும் நடைபயிற்சி செய்வதும், நல்ல உணவு பழக்கங்களை கடைபிடித்தது, சரியான நேரத்தில் தூங்குவது, நேரத்திற்கு உணவு உட்கொள்வது என்று ஒரு வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறையை கடைபிடித்தவர் ராஜேஷ். நீடித்த வாழ்விற்கு மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதையே இறுதிவரை கடைபிடித்து வந்தவர் ராஜேஷ் என்று சொன்னால் அது மிகையல்ல. 

மறைந்த நடிகர் ராஜேஷ் உடன் பணியாற்றிய திரையுலக கலைஞர்கள் அனைவரும் அவரை பற்றி கூறும்போது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தவர். சரியான உணவு பழக்கங்களை கொண்டவர், அனைத்து துறையிலும் ஆழ்ந்த அறிவு கொண்டவர் என்றே தெரிவிக்கின்றனர். 35 ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை கட்டி, அதில் இடம்பெற வேண்டிய வாசகத்தையும் தேர்வு செய்து ஊரே போற்றும்படி வாழ்ந்து மறைந்த ராஜேஷின் இழப்பு இழப்பு உறவினர்களுக்கு மட்டுமல்லாமல் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு என்றே கூறவேண்டும்.

varient
Night
Day