விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'ஜன நாயகன்'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என்று பெயரிடப்பட்டிருந்தது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரபல கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு 'தளபதி 69' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Night
Day