2020-ல் டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் உக்ரைனில் நெருக்கடி தோன்றியிருக்காது - புதின்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2020 அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி திருடப்படாமல் இருந்திருந்தால் உக்ரைனில் நெருக்கடி தோன்றியிருக்காது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது முந்தைய தோல்வியை ஏற்றுக் கொள்ளாத ட்ரம்ப், தான் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா-உக்ரைன் போர் நடந்திருக்காது எனக் கூறி வந்தார். தற்போது அவர் மீண்டும் அதிபராகி உள்ள நிலையில், ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த புதின், ட்ரம்பை புத்திசாலி மற்றும் நடைமுறைக்கு ஏற்ற மனிதர் எனப் பாராட்டினார். 2020 இல் அவரிடமிருந்து வெற்றியைத் திருடாமல் இருந்திருந்தால் 2022 இல் உக்ரைனில் நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என ட்ரம்ப் கூறுவதில் தான் உடன்படுவதாகவும் புதின் தெரிவித்தார்

varient
Night
Day