நகை, பணம் மோசடி - பிரபல நடிகை தலைமறைவு

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளரிடம் நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட சீரியல் நடிகை மற்றும் அவரது மூன்றாவது கணவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாநகரின் கோவை சாலையில் தினேஷ் ராஜ் என்பவர் உணவு விடுதி  ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக பணத்தேவை இருந்ததால் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பாலாஜி என்ற பாலமுருகன் என்பவரை அணுகியுள்ளார். கரூரில் உள்ள தனது நண்பரிடம் பணத்தை பெற்றுத் தருவதாக கூறிய பாலாஜி, ஆறுமுகம் என்பவரிடம் ஒப்பந்தம் போட்டு 10 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று அதனை தினேஷ் ராஜிடம் தராமல் அவரே வைத்துக் கொண்டார். பின்னர் சென்னை சென்று பிரச்சனையை தீர்ப்பதாக கூறி தினேஷ் ராஜிடம் இருந்து விலை உயர்ந்த கார் மற்றும் 5 சவரன் நகையை  பாலாஜி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவரிடம் வாங்கிய கார் மற்றும் நகையை, தனது மனைவியான சீரியல் நடிகை ராணியிடம் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை 10 லட்சம் ரூபாய் பணம், கார் மற்றும் நகையையும் பாலாஜி திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தினேஷ் ராஜ் கேட்டதற்கு பாலாஜி அவரை கத்தியால் தாக்கி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து தினேஷ் ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் கரூர் நகர காவல்துறையினர், பாலாஜி, அவரது மனைவியான சீரியல் நடிகை ராணி உட்பட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  பிரபல நடிகையான ராணி, சிகரம், அலைகள், சொந்தம், அத்திப் பூக்கள், வள்ளி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் வில்லி கேரக்டரில் நடித்து பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day