வசூலை குவிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி 2 நாளில் ஒட்டுமொத்தமாக 18 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகி வெள்ளியன்று  உலகளவில் வெளிவந்த திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆக்‍ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜி.வி. பிரகாஷின் இசையும் அமைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் 10 கோடி ரூபாயும், 2வது நாளில் 8.6 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

varient
Night
Day