மக்களவை தேர்தல் - திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலையொட்டி, நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பகல்நேர காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் தினத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day