பாடகர் பங்கஜ் உதாஸ் உடல்நலக்குறைவால் காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தி சினிமாவின் பின்னணி பாடகரான பங்கஜ் உதாஸ் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 1970ம் ஆண்டு பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகை ஹேமா மாலினி நடிப்பில் வெளியான படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பங்கஜ் உதாஸ். அதனை தொடர்ந்து, பாலிவுட்டில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற பங்கஜ் உதாஸ் உயிரிழந்த நிலையில், அவரது பாடல்களை ஷேர் செய்து பாலிவுட் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

varient
Night
Day