ஆந்திரா: தனியார் கல்வி நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே தனியார் கல்வி நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. கஜுவாகா பகுதியில் இயங்கி வரும் ஆகாஷ் பைஜூஸ் என்ற தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் வானுயர புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிபத்துக்கான காரணங்களை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day