சினிமா
நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயத...
ஷோயப் மாலிக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலர் தனக்கு காதல் வசனங்கள் கொண்ட குறும் செய்திகளை அனுப்பி இருப்பதாக பாகிஸ்தான் நடிகை நவல் சயீத் சூசகமாக தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்திய டென்னிஸ் முன்னாள் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவரான பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் அதே நாட்டை சேர்ந்த நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்துள்ளார். கிரிக்கெட் வீரர்களின் குறுஞ்செய்தி குறித்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் நடிகை நவல் சயீத் நடிகர்களை விட பிரபலமானவர்களாக கருதப்படும் கிரிக்கெட் வீரர்கள் இப்படி செய்வது தமக்கு வியப்பளிப்பதாக தெரிவித்தார். நவல் சயீத்துக்கு இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருந்தாலும் தாம் விளம்பரத்துக்காக இதனை கூறவில்லை என்று தெரிவித்தார். கிரிக்கெட் வீரர்கள் பலரும் நடிகைகளை திருமணம் செய்துள்ளதாகவும், அதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டார்.
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயத...
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை புனித ?...