நயன்தாரா வழக்கு - இறுதி விசாரணை ஜன.22க்கு ஒத்திவைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. திருமண ஆவணப் படத்தில் 'நானும் ரவுடி தான்' படபிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதாக, நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, நெட்பிலிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

varient
Night
Day