நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் : விசில் போடு முதல் பாடல் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்பட உருவாகி வருகிறது. இப்படத்தில், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம், வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியானது. யுவன் இசையில் விஜய்யின் குரலில் பாடல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Night
Day