திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சிம்பு திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள "தக் லைப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 3 புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. 'பார்க்கிங்' திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 49' படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 50' திரைப்படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார். இந்தநிலையில், திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சிம்பு, திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்கான கதை விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Night
Day