தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்த நாள் : கொண்டாட்டத்திற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், நடிகர் அஜித்குமாருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். கிரிக்கெட் வீரர் நடராஜன் தற்போது ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக சக கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஐதரபாத்தில் நேற்றிரவு நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் எதிர்பாரா இன்ப அதிர்ச்சியாக நடிகர் அஜித்குமார் பங்கேற்று, நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த புகைப்படங்களில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. 

varient
Night
Day