தனுஷுடன் நடிக்க மறுத்த இசையமைப்பாளர் தேவா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனுஷின் 50-வது படமான ராயன் திரைப்படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் நடித்து இயக்க விருக்கும் அவரது 50 ஆவது படமான ராயன் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கன்சாரா, துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு இசையமைப்பாளர் தேவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தேவா நடிக்க மறுத்திருக்கிறார். தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ள அவர், ராயன் படத்தின் வில்லன் கதாப்பாத்திரம் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றும் அதனை உள்வாங்கி நடிப்பதில் தனக்கு சிரமம் இருந்ததாலேயே மறுத்ததாக கூறியுள்ளார். 

Night
Day