சினிமா
"தமிழ் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்"
தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் காட்சிகளுக்காக 'கிங்டம்' படத்தயா...
ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், ஜார்ஜ் பனாயிடோ என்பவரை கடந்த 2019ம் ஆண்டு நிச்சயம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதற்கிடையே, ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்குடன் எமி ஜாக்சன் காதல் வயப்பட்டார். கடந்த 2022ம் ஆண்டு இந்த காதலை உறுதி செய்த நிலையில், பனிப்பிரதேசத்தில் அவர்கள் இருவரும் நிச்சயம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் காட்சிகளுக்காக 'கிங்டம்' படத்தயா...
தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் காட்சிகளுக்காக 'கிங்டம்' படத்தயா...