பேரறிஞர் அண்ணா நினைவு நாள் : பிப்.3-ல் புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 55-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, வரும் 3ம் தேதியன்று, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் ​வெளியிட்டுள்ள செய்திக்‍ குறிப்பில், "தென்னாட்டு பெர்னார்ட் ஷா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தமிழர்களின் வாழ்வில் எந்நாளும் நீக்கமற நிறைந்திருப்பவர் என்றும், தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர் என்றும், தனது பேச்சாற்றல், எழுத்தாற்றலால் தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

பேரறிஞர் பெருந்தகை அண்ணா கடைபிடித்து வந்த ஒப்பற்ற கொள்கைகளைப் பின்பற்றி அதேவழியில் நாமும் தொடர்ந்து பயணித்திட, அவரது நினைவு நாளான ஃபிப்ரவரி 3ம்​தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத் தொண்டர்களோடு ஒன்றிணைந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களும், அண்ணாவின் தம்பி இதயக்கனியாம் நம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பாசமிகு தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பெண்கள், இளம்சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்களும், ஜாதி மத பேதமின்றி, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Night
Day