இலங்கை அமைச்சரை சந்தித்த நடிகர் ரவிமோகன், கெனீஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கைக்குச் சென்ற நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனீஷா ஆகியோர், அந்நாட்டு அமைச்சரையும் சந்தித்தனர். தனது மனைவி ஆர்த்தியை அண்மையில் பிரிந்த நடிகர் ரவிமோகன், பாடகி கெனீஷாவுடன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்று வருகிறார். இதனிடையே, தான் இசையமைத்துப் பாடி, அண்மையில் வெளியான 'அன்றும் இன்றும்' என்ற மியூஸிக் வீடியோ தொடர்பான நிகழ்ச்சியை நடத்துவதற்காக கெனீஷா இலங்கை சென்றுள்ளார். அவருடன் நடிகர் ரவி மோகனும் இலங்கை சென்றுள்ள நிலையில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத்தை இருவரும் சந்தித்தனர். இலங்கை சுற்றுலாத் தலங்கள் மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகள் குறித்தும் அப்போது கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

Night
Day